தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் உலக பணக்காரரான எலான் மஸ்க் அதிபர் தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார். அதில் அவர் மதுரோ ஒரு சர்வாதிகாரி, அங்கு நடந்த தேர்தல் ஒரு கேலிக்கூத்து என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கு நிக்கோலஸ் மதுரோ தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் போது பதிலளித்தார். உங்களுக்கு சண்டையிட விருப்பமா, நான் தயாராக இருக்கிறேன். நான் பயப்படவில்லை. சண்டைக்கான இடத்தை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். இதற்கு எலான் மஸ்க் அவரது எக்ஸ் பக்கத்தில் சவாலை நான் எதிர்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் இதில் ஜெயித்தால் நான் செவ்வாய் கிரகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றார். மேலும் நான் உங்களிடம் வருகிறேன். மேலும் உங்களை கிட்மோவுக்கு கழுதையில் அழைத்துச் செல்ல போகிறேன் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.