கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் அவ்னீத் கவுரும் காதலிப்பதாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. எப்பொழுதுமே ஏதாவது ஒரு ஹாலிவுட் நடிகையோடு சுப்மன் கில் பெயர் அடிபடுவது வழக்கம். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை . இதற்கிடையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரை சுப்மன் கில்  காதலிக்கிறார் என்றும் பேசப்பட்டது .

ஆனால் சாரா டெண்டுல்கர் எதுவுமே சொல்லவில்லை. அவர் அவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நீங்க சுப்மன் கில்லை  காதலிக்கிறீர்கள் தானே என்று சாரா அலிகானிடம் கேட்கப்பட்டபோது அவர் ஐயோ அது நான் இல்லை. அந்த சாரா அதாவது சாரா டெண்டுல்கர் என்று கூறியிருந்தார்.  தற்போது அவனீத் கவூரின் பெயர் அடிபடுவதால் அவர் யார் என கூகுளில் கிரிக்கெட் ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  அதாவது இவருக்கு 24 வயது ஆகிறது. அருமையாக டான்ஸ் ஆடுவார் பல டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.