அதிமுகவில் உள்கட்சி மோதல்களும் தலைமைத்துவப் போராட்டங்களும் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்த சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு, சசிகலாவை தலைமைப் பொறுப்பில் நியமிக்க மூத்த தலைவர்கள் சிலர் இரகசியமாகக் காய்நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

​இந்த அதிரடி திட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள், கட்சிக்கு எதிராகச் செயல்படும் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரை உடனடியாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்க வேண்டும் என இபிஎஸ்ஸிற்கு ஆலோசனைகளையும் அழுத்தங்களையும் வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி பெரும் தயக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

​ஒருவேளை அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கினால், அவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் உடனடியாகத் தவெகவில் இணைந்து, வரும் காலத்தில் எளிதாக வெற்றி பெற்று MLA மற்றும் அமைச்சர்களாகி விடுவார்கள் என்ற தீவிர அச்சம் அதிமுக தலைமைக்கு எழுந்துள்ளது. கட்சியிலிருந்து நீக்கினால் மாற்று முகாமிற்குச் சென்று தங்களது செல்வாக்கை நிரூபித்து விடுவார்கள் என்பதால், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி செய்வதறியாது திகைத்து நிற்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.