சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.   தமிழ்நாட்டில் சென்னை மெட்ரோ மக்களின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை ஜூலை 15ஆம் தேதி அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். மொத்தம் 39 கிமீ தூரத்திற்கு 32 நிறுத்தங்களுடன் உயர்மட்ட திட்டமாகவே கோவை மெட்ரோ செயல்பட இருக்கிறது. திட்டம் தொடங்கி 3.5 ஆண்டுகளில் ரயில்கள் ஓடத் தொடங்கும் என்றும் முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்ட ரயில்கள் ஓடும் என்றும் கூறப்பட்டுள்ளது.