பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் சினிமா பாணியில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, கோவையில் பட்ட பகலில் கொலை மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் பதற வைக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கோவையில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் முன் விரோதத்தின் காரணமாக ஒருவர் துப்பாக்கியால் சுட்டும், ஒருவர் அரிவாளால் வெட்டியும் கொல்லப்பட்டுள்ளார்.

அதன் பிறகு கோவை கோர்ட் வளாகத்தின் பின்புறத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சரவணம்பட்டி பகுதியில் இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் பதற வைக்கிறது. மேலும் தமிழகத்தில் முன்பு இல்லாத அளவுக்கு தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.