திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போட்டிகாம்பட்டியில் மகாகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில் திருவிழாவின் முதல் நாளில் கரகம் ஜோடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கரகாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை காண பெண்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் ஒன்று கூடினர். அப்போது அங்கு வந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் எஸ் ஆர் பழனிசாமி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நடந்து கொண்டார்.

அதாவது மது போதையில் இருந்த அவர் கரகாட்ட பெண்களுடன் திடீரென நடனமாட தொடங்கினார். அவர்களைத் தொட்டு ஆபாசமான செய்கைகளுடன் நடனமாடியது அங்கிருந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனைத் தொடர்ந்து கரகாட்ட பெண்கள் முகம் சுளித்த போதும் தொடர்ந்து அவர்களை கட்டி அணைத்தபடி நடனம் ஆடினார். இதனால் கிராமப் பெண்கள் நடையை கட்டினர். தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது