
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சக்தி மாவட்டத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்க வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று திடீரென தனது நாக்கை அறுத்துக் கொண்டார். அதன்பிறகு கோவிலில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக தியானத்திலிருந்து யாரேனும் தன்னை எழுப்பினால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
இதனை பார்த்த சிலர் போலீசாருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அந்த சிறுமியின் பெற்றோரையும் போலீசார் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். கடவுள் மீது இருக்கும் பக்தியால் சிறுமி நாக்கை அறுத்துக் கொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.