இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் சுமாராகவே விளையாடினார்கள். இதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஸ் பைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் ஒரு தரப்பினர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நேரம் வந்துவிட்டதாக விமர்சித்து இருந்தார்கள் . இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நான் வந்தால் ரசிகர்கள் போல ரோகித்தை அணியிலிருந்து நிக்க மாட்டேன் என்று முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அதாவது ,பிட்னஸ் இல்லாத ரோகித் சர்மாவை 20 கிலோ மீட்டர் ஓட விடுவேன். ஒருவேளை என்னை நீங்கள் இந்த இந்திய அணியின் தலைமை பேச்சாளராக நியமித்தால் நான் இந்த வீரர்களை எவ்வளவு வயதானாலும் தோற்கடிக்க முடியாதவர்களாக மாற்றுவேன். அவர்களுடைய திறமையை யார் கொண்டு வருவார். ரசிகர்கள் எப்போதும் அவர்களை அணியில் இருந்து நீக்குமாறு சொல்கிறார்கள். ரோகித்தை  நீக்குங்கள், விராட் கோலியை தூக்குங்கள் என்றும் பேசுகிறார்கள்.

ஆனால் அவர்களை ஏன் நீக்க வேண்டும்? கடினமான காலத்தில் இருக்கும் அவர்களிடம் குழந்தைகளை நான் உங்களுக்கு இருக்கிறேன் என்று சொல்வேன். இந்த வீரர்கள் வைரத்தை போன்றவர்கள். நான் அவர்களுடைய தந்தை போல இருப்பேன் . தோனி  உட்பட யுவராஜ் சிங்கையும் மற்றவர்களையும்  நான் வித்தியாசமாக பார்ப்பதில்லை. அதே சமயம் தவறு என்றால் அது தவறு என்றுதான் சொல்வேன்” என்று கூறுலார்.