தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்த புகழ் பெற்றவர் கருணாஸ். இவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி மற்றும் ஆதார் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். நடிகர் கருணாஸின் மனைவி பாடகியான கிரேஸ். இவர் பல ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராகவும் கலந்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு டயானா என்ற மகளும், கென்‌ கருகாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கென் கருகாஸ் அசுரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகர் கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அவருடைய மகன் வலைதள பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய அக்கா மாமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.