தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் மக்களுக்கு உண்மையான பக்தி கிடையாது.

யார் பெரியவர் என்பதை நிரூபிக்கவே கோயில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. கோயில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது. வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.