
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் மற்றும் மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஜூன் 6, 9,14,16,21,23,28,30 ஆகிய தேதிகளில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1:55 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூருவை சென்றடையும்.
இதேபோன்று மறு மார்க்கத்தில் மங்களூரில் இருந்து ஜூன் 8,10,15,17,22,24,29 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் சனி மற்றும் திங்கட்கிழமை தோறும் மதியம் 12 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். மேலும் கோடை விடுமுறையில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.