கர்நாடக தேர்தல் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இன்றோடு பிரச்சாரம் ஓய்வடைகிறது. இந்நிலையில் நேற்று  பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் அங்கு பேசிய விவகாரம் இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. “கொரோனா தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மஞ்சள் அதிகரிக்கும் என்று நான் சொன்னபோது காங்கிரஸ் என்னை கேலி செய்தது. அவர்கள் என்னை அவமதிக்கவில்லை. மஞ்சள் விவசாயிகளை அவமதித்துள்ளனர்” என்று மோடி பேசினார்.