இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் அனைவரும் உங்க கவசம் அடைந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிகரிக்கும் கொரோனாவை கருத்தில் கொண்டு கேரளாவில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் பிற நோய் உள்ளவர்களுக்கு முக கவசம் கட்டாயம் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 1801 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.