பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சர்வதேச மேடைகளில் நமது நாட்டின் கொடியை ஏற்றிய மல்யுத்த வீரர்கள் காவல்துறையின் காலடியில் நசுக்கப்பட்டுள்ளனர்.

WFI தலைவர் பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கைக்கோரி தேசியக் கொடியுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற வீரர்களை தடுத்த போலீசார், சாலையில் இழுத்துச்சென்று கைது செய்தனர். இது நாட்டுக்கே அவமானம் என்றும், மல்யுத்த வீரர்கள் மீதான அரசின் அணுகுமுறை தவறானது என்றும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.