குஜராத் மாநிலம் நவசாரி மாவட்டத்தில் உள்ள மிர்ஜாப்பூர் கிராமத்தில், ஒரு தம்பதிகள் ஹைடென்ஷன் பவர் கிரிட் கோபுரத்தின் மீது மது போதையில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த லட்சுமிபேன் படேல் (வயது 32) மற்றும் அவரது கணவர் ஜெயேந்திர படேல் (வயது 35) ஆகிய இருவரும் பவர் கோபுரத்தில் ஏறினர்.

இதுகுறித்து அறிந்த மாரோலி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி பாதுகாப்பாக கீழே இறக்கி உள்ளனர். விசாரணையின் போது, ஜயாபேன் ராஜுபாய் ரத்தோட் என்ற பெண் இந்த தம்பதிக்கு மது வாங்கி கொடுத்தது தெரியவந்தது.

அவர்களிடம் மதுபானம் அருந்துவதற்கான எந்தவொரு அனுமதிப்பத்திரமும் இல்லாததால், குஜராத் மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 66(1)(B) மற்றும் 85(1)(3) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.  ஹைடென்ஷன் கோபுரங்களில் ஏறுதல் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.