
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியின் போது 14 வயதான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் க்ரிஷ் கெயிலுக்குப் பிறகு அதிவேகமாக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி அதிவேகமாக ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதோடு இளம் வயதில் ஆட்டநாயகன் விருது வென்றவர் என்ற பெருமையையும், அதிவேகமாக அரை சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
View this post on Instagram
ஒரு 14 வயது சிறுவன் இவ்வளவு அற்புதமாக கிரிக்கெட் விளையாடியது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் பல கிரிக்கெட் ஜாம்பவான்களையும் கவர்ந்துள்ள நிலையில் அந்த சிறுவனின் வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் வைபவின் ஒரு சிறு வயது வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பும்ரா என்ற பெயரை மழலை மொழியில் உச்சரிப்பது காணப்படுகிறது.
இதனை வைபவ் சூரியவன்சி என்று பலரும் கூறும் நிலையில் பலர் அது உண்மை இல்லை என்கிறார்கள். ஏனெனில் சிறுவனின் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் வைபவின் தந்தை கிடையாது. இதன் காரணமாக அந்த குழந்தை வைபவாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் இதோ அந்த வீடியோ