ஆளுங்கட்சி என்றால் மாநிலத்தையே விலைக்கு வாங்கியவர்களா என்ன?  ரோட்டின் நடுவே இப்படி சாலையை உடைத்து கொடி வைக்கும் தைரியம் இவர்களுக்கு யார் கொடுத்தது?   கொஞ்சமாவதுபொது அறிவு கொண்டவர்கள் இப்படி ஒரு செயலை செய்வார்களா? என்று அறப்போர் இயக்கத்தினர்  கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சாலையை உடைத்து நாசம் செய்து பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி கொடி வைத்து வரவேற்றால் தான் விழாவுக்கு வருவேன் என்று சொல்ல அரசியல்வாதிகளுக்கு அசிங்கமாகவே இருக்காதா?

ஆளுங்கட்சிக்காரர்களே  இப்படி சட்டத்தை மீறி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தினால் மற்ற கட்சிகள் சட்டத்தை மீறும் போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை தடுக்க முடியும்? என ட்வீட் செய்துள்ளனர்.