நாடு முழுவதும்  உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கருவிழி மற்றும் கைரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் கைரேகை மற்றும் கண்விழி ஸ்கேன் ஆகாததால் சிலருக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக தற்போது அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அதாவது ரேஷன் கார்டு தாரர்கள் வாங்கும் அளவிற்கு மேல் விநியோக பட்டியலை தயார் செய்யக்கூடாது. இது போலிப்பட்டியல் என்ற வகையில் ஒழுங்கு நடவடிக்கையுடன் சேர்த்து குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வழிவகுக்கும். மேலும் கைரேகை மற்றும் கண் கருவிழி ரேகை ஸ்கேன் செய்வது தோல்வியடையும் பட்சத்தில் கையெழுத்து வாங்கி  பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.