
இமாசலப்பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இந்நிலையி இவர் வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதன்படி அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.28.7 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 62.9 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கையிருப்பு தொகையாக ரூ.2 லட்சம், வங்கி கணக்கில் ரூ.1.35 கோடி உள்ளது என அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மும்பை, பஞ்சாப் மற்றும் மணாலியில் தனக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.3.91 கோடி மதிப்பிலான 3 சொகுசு கார்கள் தன்னிடம் இருப்பதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.