தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்  மாவட்டத்தின் போதன்  நகரில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். அதன் பின்னர் அந்த நபரை சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவருடைய கைகளை இரும்பு சங்கிலிகளால் கட்டினர். பின்னர் போலீஸ் ஸ்டேஷன் முழுவதையும் சுத்தம் செய்யுமாறு அந்த நபரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த நபர் இரும்பு சங்கிலி இருந்ததால் ஊர்ந்து  சென்று போலீஸ் ஸ்டேஷனை சுத்தம் செய்த நிலையில் அங்கு சென்ற ஒருவர் இதனை வீடியோ எடுத்து வெளியிட அது வைரலானது.மேலும் இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு இதுவரை போலீசார் விளக்கம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.