அதிமுக பொதுக்கூட்டம் தீர்ப்பு சாதகமாக வந்ததை அடுத்து தன்னை அசைக்க முடியாத ஒற்றை தலைமையாக நிரூபிக்கும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்ட உள்ளார் ஆனால் அந்த கனவில் கல்லை போடும்படியாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் சில அமைச்சர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரைடு நடத்தப்பட்டு இருந்தாலும் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியை லாக் செய்யும் வகையில் ரைடோ விசாரணையோ நடைபெறவில்லை.

எடப்பாடி நோக்கி பாய்ந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை அவர் நாசுக்காக திமுக பக்கமே திருப்பி விட்டார். பட்டுவாடா செய்பவர்களாக பிரபலமாக கூறுபடும் எஸ்.வி வேலுமணி மற்றும் தங்கமணி லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பின் கீழ் இருந்ததால் இடைத்தேர்தலில் பணம் செலவு செய்ய தயக்கம் காட்டி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் தனது அரசியலை வலுப்படுத்த துடிக்கும் எடப்பாடி பழனிசாமி ஈரோடு இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் மேலிடத்தின் கண்ணை உறுத்தல் லஞ்ச ஒழிப்பு துறையின் சொத்து குவிப்பு வழக்கு விரைவில் பழனிச்சாமியின் மீது பாயும் என கூறப்படுகிறது. மேலும் கொட நாடு வழக்கு விசாரணையும் சூடுபிடிக்க வாய்ப்பு இருக்கும் போன்ற அனுமானங்கள் அடிபடுவதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.