
புதுடெல்லி ஜெகத்புரி பகுதியில் வசிக்கும் சிறுமியும் அர்ஜுன் என்ற வாலிபன் சோசியல் மீடியா மூலம் பழகி உள்ளனர். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அவ்வப்போது இருவரும் நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். எதிர்காலத்தில் சிறுமி சட்டத்துறையில் படிக்க ஆசைப்பட்டுள்ளார்.
அர்ஜுன் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காதல் ஜோடிக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில், சிறுமி தனது கை மணிக்கட்டை அறுத்து, அதன் புகைப்படத்தை காதலருக்கு வாட்சப்பில் அனுப்பியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அர்ஜுன், உடனடியாக சிறுமியின் தாயிடம் தொடர்பு கொண்டு அவரது மகளை காப்பாற்ற முயற்சித்தார். சிறுமியின் தாய் தனது மகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு அவளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியின் காயம் தீவிரமாக இருந்தாலும், அவளை மருத்துவர்கள் காப்பாற்ற முடிந்தது.
இதற்கிடையில், அர்ஜுன் மருத்துவமனைக்கு வந்து, தனது காதலியின் நிலையை நேரில் பார்த்தபோது, இரத்தக்கறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனால், அவர் திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.