நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் டிஐஜி வருண்குமாருக்கும் இடையே மோதல் போக்கு என்பது நிலவி வருகிறது. வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பியதோடு கொலை மிரட்டல் விடும் விதமாக பேசியதால் சீமான் மீது வருண்குமார் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சீமானுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராவதற்கு இன்று வருண் குமார் ஐபிஎஸ் நீதிமன்றத்திற்கு வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சீமானுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. நான் என் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தரம் தாழ்ந்த செய்திகளை சீமான் தரப்பினர் பரப்பி வருகிறார்கள். கேவலமான எண்ணம் படைத்த மனிதராக அவர் இருக்கிறார். மேலும் இது போன்ற தவறான கருத்துக்களை பரப்புவதை தவிர அந்த மைக் புலிகேசியால் வேறு என்ன செய்து விட முடியும் என்று கூறினார்.