தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த கேப்டன் விஜயகாந்த் தேமுதிக என்ற அரசியல் கட்சியினை தொடங்கினார். கட்சி தொடங்கிய இரண்டாவது தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக அந்தஸ்து பெற்ற விஜயகாந்த் உடல் நலக்குறைவின் காரணமாக அடுத்தடுத்து தோல்வியை தழுவினார். இருப்பினும் தமிழக அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் ‌ உடல் நலக்குறைவினால் காலமானார். அவர் இறந்த பிறகு பலரும் கேப்டன் ஒரு நல்ல மனிதர் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று கூறினார்கள்.

ஆனால் அவர் உயிரோடு இருக்கும் வரை அதை யாரும் நினைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்கள். இந்நிலையில் தேமுதிக கட்சியின் தொண்டர் ஒருவர் தற்போது கேப்டனை வீணாக்கியதே  மீடியாக்காரங்க தான் என்று வேதனையுடன் கூறுகிறார். அதேபோன்று தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயையும் நீங்கள் என்ன செய்ய காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை என்று வேதனையுடன் கூறினார். 2026 நடைபெறும் தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறினார்.