
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் தேமுதிக மாநில மாநாடு நடைபெறும். தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
- தேமுதிகவின் அனைத்து மாவட்டத்திலும், கழகத்திற்காக பணியாற்றி மறைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவிற்கும் உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
- ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளின் குடும்பத்தினருக்கு இருங்கள் தெரிவித்ததோடு, தாக்குதலில் பலர் காயமடைந்திருப்பதை தேமுதிக வன்மையாக கண்டித்து உள்ளது.
- தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்-க்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும்.
- வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளுக்கு எந்த வித பாதிப்பும் தீங்கும் ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்.
- மதுபான விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும். கஞ்சா, கலாச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்து தமிழகத்தை காக்க வேண்டும்.
- கச்சத்தீவை மீட்டெடுப்பது மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.
- தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து உயிரிழப்புகளும் விபத்துகளும் நடைபெறாத வண்ணம் மக்களை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
- மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜிஎஸ்டி வரி குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.