நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த சூழலில் பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனென்றால் இதற்கு முன்பு கேட்டனாக அணியை வழிநடத்திய தென் ஆப்பிரிக்கா வீரர் Fuf Du Plessis டெல்லி அணிக்கு சென்றுள்ளார். பெங்களூர் அணிக்கு பழையபடி அனுபவம் மிக்க விராட் கோலி தான் கேப்டனாக நியமிக்கப்பட்ட இருப்பதாக கூறப்பட்டது. தகவல் மட்டும் இன்றி ரசிகர்களுடைய எதிர்பார்ப்பும் அதுவாக தான் இருந்தது.

இந்த நிலையில் தான் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆர்சிபி அணியின் எட்டாவது கேப்டன் ஆவார். இதனைத்தொடர்ந்து  ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் ரஜத்  படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “நான் உனக்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். கேப்டன் பொறுப்பிற்கு உனக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. நாங்கள் எப்போதும் உன் பின்னால் பக்கபலமாக இருப்போம். ரசிகர்களும் இவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.