2025-ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘எட்டிங்டன்’ திரைப்படம் பிரிமியராகும் நிகழ்வில் பங்கேற்ற நடிகை எமா ஸ்டோன், சிவப்புக் கம்பளத்தில் புகைப்படம் எடுக்கும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு தேனீ  அவரை தொந்தரவு செய்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் ஜோக்கின் பீனிக்ஸ், ஆஸ்டின் பட்லர், பெட்ரோ பாஸ்கல், ஆரி அஸ்டர் மற்றும் லூக் கிரிம்ஸுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது தேனீ அவரை நெருங்கியது. முதலில் எமா ஸ்டோன் தனது கைகளை பயன்படுத்தி தேனீயை விரட்ட முயன்றாலும், அது பலனளிக்கவில்லை.

 

இந்த தருணத்தில், நடிகர் ஆஸ்டின் பட்லர் தேனீயை விலக்க முயன்றார். பின்னர், பெட்ரோ பாஸ்கலும் கையில் அலைத்து insect-ஐ ஒதுக்க முயற்சித்தார். தேனீ தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்க, எமா ஸ்டோன் நாணத்தோடு பெட்ரோவின் தோள்களில் பதுங்கிக் கொண்டு தன்னை பாதுகாத்தார். இந்த சம்பவம் அங்கிருந்த நட்சத்திரங்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே சிரிப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, ரசிகர்கள் “Emma Stone vs The Bee – ஒரு சிறு படம்” என மீம்களாக உருவாக்கி பரப்பினர். மேலும் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.