
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருப்பதோடு அந்த வீடியோவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது வாலிபர் ஒருவர் சாலையில் குதிரையில் செல்கிறார். அவர் குதிரையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இரு பெண்களை குதிரை எட்டி உதைத்தது.
இதில் நிலை தடுமாறி அந்த பெண்கள் கீழே விழுந்த நிலையில் குதிரையில் வந்த வாலிபர் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டார். அந்த வாலிபரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் அவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு சாலைகளில் இப்படி குதிரையில் ஆபத்தான பயணம் செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
View this post on Instagram