தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. தெலுங்கு சினிமாவில் ஆக்சன் ஹீரோ என்று சொன்னால் பலரது நினைவுக்கும் வருவது பாலகிருஷ்ணாவின் பெயர் தான். ஏனெனில் பொதுவாக ஹீரோக்கள் அடித்தால் வில்லன்கள் மட்டும் தான் பறப்பார்கள். ஆனால் பாலையா அடித்தால் பின்னால் நிற்கும் கார், லாரி சில சமயங்களில் ரயில் கூட பறக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற திரைப்படத்தின் பிரம்மாண்ட ப்ரமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணாவின் நாற்காலிக்கு அருகில் ஒரு பாட்டிலில் தண்ணீர் மற்றும் ஒரு பாட்டிலில் சரக்கு இருந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி ‌ ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.