
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எனவும் பாஜக இல்லாமல் தமிழக அரசியல் கிடையாது என்றும் கூறினார். அதோடு முன்பு பாஜக தீண்ட தகாத கட்சி, எங்களுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என்றெல்லாம் விமர்சித்தார்கள். ஆனால் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க தவம் இருக்கிறார்கள் என்றார். அவர் மறைமுகமாக அதிமுகவை அப்படி விமர்சித்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாங்கள் கூட்டணிக்காக தவம் இருக்கவில்லை. அவர்கள் எங்களையும் சொல்லவில்லை. எங்கள் பொதுச் செயலாளர் பாஜகவுடன் கூட்டணி என்று இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அவர் எங்களுடைய அரசியல் எதிரி திமுக தான் என்று கூறியுள்ளார்.மேலும் இவர் சொல்வதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதும் கிடையாது கண்டுகொள்ளப் போவதும் கிடையாது என்று கூறினார்.