இஸ்ரேல் ஹமாஸ் இடையே பத்தாவது நாளாக தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ் அமைப்புக்கு ஈரானும் ஆதரவாக செயல்படுவதாக கூறப்பட்டது.

இந்த மோதலில் இதுவரை பாலஸ்தீனியர்கள் 2300 பேர் உயிரிழந்ததால் அவர்களது பெரும்பாலான உடல்களை புதைக்க இடம் இன்றி ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வண்டியில் சேமித்து வைக்க துவங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.