15 வீரர்களைப் பற்றிய தெளிவான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட புரிதல் தனக்கு உள்ளது என்று ரோஹித் சர்மா கூறினார்.

கடந்த சில மாதங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் டீம் இந்தியா எதிர்பார்த்தபடியே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம், ஆசிய கோப்பையை வென்றது மற்றும் இப்போது ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றது என அனைத்திலுமே சிறப்பாக ஆடியுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியின் ஆட்டம் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு இருந்தாலும், இந்திய ரசிகர்களின் ஆசை என்னவோ உலக கோப்பையை வெல்வது தான். அதற்க்கு தான் இந்திய அணியும் தங்களை தயார்ப்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் தொடரை இந்தியா வென்றது. ஆனால் கடைசி போட்டியில் 352 ரன்களைத் துரத்தும்போது என்ன தவறு நடந்தது? என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. மீண்டும் மீண்டும் தவறுகளைத் தவிர்ப்பது முக்கியம். மறுபுறம், போட்டி தோல்விக்கு பிறகு, கேப்டன் ரோஹித் சர்மா அணி வீரர்களுக்கு மதிப்புமிக்க அறிவுரைகளை வழங்கியுள்ளார். தோல்வி துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அடுத்த ஒன்றரை மாதங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டினார்.

கேப்டன் ரோகித் சர்மா என்ன சொன்னார்?

“துரதிர்ஷ்டவசமாக இன்று (நேற்று) நாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. பும்ராவின் ஆட்டத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உலக கோப்பைக்கான 15 வீரர்களைப் பற்றி பேசும்போது, ​​நாம் என்ன விரும்புகிறோம் மற்றும் நமக்காக அந்த வேலையை செய்யும் வீரர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றும் குழம்பவில்லை.

நாங்கள் ஒரு குழுவாக என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாம் எந்த திசையில் நகர்கிறோம் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். கடந்த சில போட்டிகளில் தனது அணி சவால்களை சிறப்பாக எதிர்கொண்டதாகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் எடுத்ததற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறினார்.

மேலும்  ‘கடந்த ஏழு-எட்டு போட்டிகளில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம். வெவ்வேறு சூழ்நிலைகளில் நாங்கள் நன்றாக விளையாடினோம். சில சமயங்களில் சவால்களை எதிர்கொண்டோம் ஆனால் அவற்றை நாங்கள் நன்றாக சமாளித்தோம். துரதிர்ஷ்டவசமாக இன்று முடிவு நமக்கு சாதகமாக இல்லை ஆனால் நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கப் போவதில்லை. இது ஒரு குழு விளையாட்டு மற்றும் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். அப்போது சாம்பியன் பட்டத்தை வெல்வோம். இது ஒவ்வொருவரும் தங்கள் உடலைக் கவனித்து கொள்வதும், அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டி :

ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் ரன்னர்-அப் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் முதல் ஆட்டம் நடைபெறும். இந்தப் போட்டியில், தொடரின் அனுபவம் சிறப்பாக இருக்கும். மறுபுறம், அக்டோபர் 14 ஆம் தேதி டீம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறவுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ்,  ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ்.