
இந்தியாவில் பிறந்த இந்த தன்னுடைய ஆன்மீகக் கிளையை தொடங்கிய ஓஷோ பின்னர் அமெரிக்காவிற்கு குடியேறினார். இவர் தன்னுடைய ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை உலகம் முழுவதும் ஈர்த்தவர். இவர் பாலியல் சுதந்திரம் குறித்து பொதுவாக கருத்து தெரிவிப்பார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் ஒரு பரபரப்பு குற்ற சாட்டினை முன் வைத்துள்ளார்.
இந்தப் பெண்ணின் பெயர் பிரேம் சர்க்கம். இவர் தனக்கு 18 வயது ஆவதற்கு முன்பாகவே 50 தடவைக்கு மேல் ஓஷோ ஆசிரமத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எனக்கு 6 வயது இருக்கும் போது என்னுடைய தந்தையுடன் ஓஷோ ஆசிரமத்தில் சேர்ந்தேன். அப்போது ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகள் உடலுறவு வைப்பதை பார்க்க வேண்டும் எனவும் பெண்கள் பருவமடைந்த உடன் பாலியல் உறவுக்கு வயது வந்த ஆண்களை தேட வேண்டும் என்று கூறப்பட்டது.
எனக்கு 7 வயது ஆகும்போது பாலியல் தொல்லைக்கு ஆளானேன். எனக்கு 12 வயது இருக்கும் போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். நான் புனேவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று ஒரு ஆசிரமத்தில் சேர்ந்த நிலையில் கிட்டத்தட்ட 50 தடவைக்கு மேல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானேன். எனக்கு 16 வயது ஆகும்போது தான் நடந்த கொடுமைகள் பற்றி புரிந்தது.
ஓஷோ ஆசிரமத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட 2 பிரிட்டிஷ் பெண்களின் கதையும் என்னுடைய கதையும் ஆவணப்படமாக தயாராகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகிறது. அந்த ஆவணப்படத்தின் பெயர் சில்ட்ரன் ஆஃப் தி கல்ட். மேலும் எனக்கு நேர்ந்த கொடுமைகளை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயத்தை சொன்னதாக அவர் கூறியுள்ளார்.