சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளது. குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய சட்டத்தில் குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடுவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (சிஏசி) புதிய சட்டத்தை அமல்படுத்தியது.

அதன்படி சிறுவர்கள் இரவு ஸ்மார்ட்போனில் இணையத்தை பயன்படுத்த தடை விதித்ததோடு, 16-18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரமும், 8-15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு மணி நேரமும் மட்டுமே இணையத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.