குரங்கு அம்மை நோய் என்பது இனி உலகளாவிய சுகாதார அவசர நிலை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. 2022 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்த மே எட்டாம் தேதி வரை உலக அளவில் 87 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை நோய் இனி உலகளாவிய நோயின் பட்டியலில் இருந்து விடுவிப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உறுதி செய்யப்பட்ட குரங்கம்மை வழக்குகளுக்கு வழி வகுத்த வைரஸ் நோய்க்கான ஒரு வருட எச்சரிக்கை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.