குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து சூசகமாக தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா, வைரமுத்து இடையே காப்புரிமை தொடர்பாக மோதல் போக்கு நிலவுகிறது. இந்த சூழலில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து, புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.