பொதுவாகவே போதை பொருள் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், திருட்டு விசிடி, மணல் திருட்டு மற்றும் கள்ளச்சாராயம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இதனை செயல்படுத்தும் முழு அதிகாரமும் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. அவரின் பரிந்துரை இல்லாமல் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது. இந்நிலையில் தமிழக அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதாவது திண்டுக்கலை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது மகன் தமிழழகன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக ஐஜிக்கள் உத்தரவை பிறப்பிக்கும்வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர முடியுமா என்று ஆராய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தை மாவட்ட ஆட்சியர் பயன்படுத்துவதே சரியாக இருக்கும் எனவும் அப்படி இருந்தால்தான் போலீசார் தன்னிச்சையாக தவறாக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க முடியும் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் குண்ட தடுப்பு சட்டம் போடும் அதிகாரத்தை காவல்துறை தலைவர்களுக்கு வழங்க முடியாது எனவும் சட்ட திருத்தங்கள் ஏதும் செய்யத் தேவையில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.