மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் மின்வாரிய ஊழியர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் 2019 முதல் தர வேண்டிய நிலுவைத் தொகை 2 தவணைகளாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஊதிய உயர்வின் மூலமாக  தமிழ்நாடு மின்வாரியத்திற்கு வருடத்திற்கு  527 கோடி ரூபாய் செலவாகும். ஊதிய உயர்வின் மூலம் 75,978 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.