சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையம் முதல், கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததாக ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்துள்ளது. கிளாம்பாக்கம் வரை 12 உயர்மட்ட ரயில்நிலையத்துடன் ரயில் பாதை அமைக்க 4625 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, ஓசூரிலும் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த விவாதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.