தமிழகத்தில் பருவமழை தொடங்கிய போது காய்கறிகளின் விலை கிடு கிடுவென உயர்ந்த நிலையில் தற்போது விலை சரிய தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 50 வரையில் விற்பனையான நிலையில் தற்போது விலை குறைந்து 36 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதே போன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் 64 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி 22 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 33 ரூபாய்க்கும் பீட்ரூட் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோன்று அவரைக்காய் ஒரு கிலோ 48 ரூபாய்க்கும், முட்டைகோஸ் 27 ரூபாய்க்கும், கேரட் 42 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 120 ரூபாய் க்கும், பீன்ஸ் 63 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 36 ரூபாய்க்கும், இஞ்சி 65 ரூபாய்க்கும், பூண்டு 310 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.