இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்ற. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த உலகில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான விஷயமாக பார்க்கப்படுவது பாசம்தான். குறிப்பாக தாய் பாசத்திற்கு நிகரான சுயநலமற்ற கலப்படம் இல்லாத பாசத்தை யாரிடமும் எதிர்பார்க்க முடியாது.

சமீப காலமாகவே விலங்குகளின் தாய் பாசத்தை காணொளியாக நாம் பார்த்து வருகிறோம். தற்போது ஒரு காட்சி பிரமிக்க வைத்துள்ளது. அதாவது முயல் ஒன்று தனது குட்டிகளை மறைத்து வைத்து விட்டு யாரும் பார்க்காத நேரம் அதற்கு பசியாற்றும் காட்சி தான் இது. இந்த காட்சியை சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.