
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள் 5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் விதமாக அமைந்துள்ளது
தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் ஆனது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கார்டு கேஓய்சி சரிபார்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருமே தங்களுடைய குடும்ப உறுப்பினர்களோடு கேஒய்சி சரிபார்ப்பு செய்து கொள்வது அவசியம். இதனை மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 85 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது நிவாரணம் கிடைக்கிறது. மத்திய அரசு கேஒய்சி சரிபார்ப்புக்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 31 தான் என்பது நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.