தமிழ்நாடு சட்டசபை கூட்ட தொடர்பானது கடந்த மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையோடு தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டம் 13-ஆம் தேதியோடு முடிவடைந்து. இதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் ஆனது தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டமும் நடந்து வந்தது.

இந்த ஆலோசனைகள் எல்லாம் முடிக்கப்பட்டு பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் நிதித்துறையானது ஈடுபட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மார்ச் இரண்டாவது வாரத்தில் சட்டசபை கூடும் அந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் மக்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.