குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. வக்பு வாரிய மசோதா, யுஜிசி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு இரண்டு அவைகளும் தனித்தனியாக கூடும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ஆம் தேதி முடிவடைகிறது இரண்டாவது அமர்வு மார்ச் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் நான்காம் தேதி முடிவடையும். பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.