
மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிக்கு 14 வருடங்கள் சிறைத் திறனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது தன்னுடைய மனைவி பிரிந்து சென்றதால் மருமகன் தன் மாமியாரிடம் சென்று தன் மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். அவர் மது குடித்துவிட்டு மாமியாரிடம் தகராறு செய்ததால் வேறு வழி இன்றி மருமகன் வீட்டிற்கு அவர் சென்றார். அப்போது மது போதையில் இருந்த மருமகன் தன் மாமியாரை 3 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இது தொடர்பாக தன் மகளிடம் கதறிய அந்த தாய் பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மருமகனுக்கு 14 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மாமியாருக்கு 55 வயது ஆகும் நிலையில் இந்த வழக்கை எதிர்த்து மருமகன் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மருமகனின் சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மேலும் மாமியார் என்பவர் தாய் போன்றவர் என்றும் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்தது.