பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது..

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் குறைந்த ஓவர் ரேட்டிற்காக (பந்து வீச அதிக நேரம்) தண்டிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை நிறைவு செய்யவில்லை. இதனால்தான் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது..

ஐபிஎல் விதிமுறைகளை மீறியதற்காக அந்த வீரருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சீசனில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்கு தண்டிக்கப்படும் மூன்றாவது கேப்டன் ஹர்திக் ஆவார். முன்னதாக ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது..

இப்போட்டியில் பஞ்சாப் அணியை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்திய போதிலும், குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை முடிக்க முடியாமல் குஜராத் அணியிடையே குழப்பம் ஏற்பட்டது. விதியை மீறியதற்காக  அந்த அணிக்கு  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..

முன்னதாக லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி கேப்டன் டுபிளெசிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்த நிலையில், குஜராத் அணி ஒரு பந்து மீதம் உள்ள நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.