தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் எழுச்சமிகு உரையை விஜய் அவர்கள் ஆற்றியிருந்தார். அவரது பேச்சு திமுகவை நேரடியாக சாடியது போல் இருந்ததாக பல கருத்துக்கள் இணையத்தில் பரவி வர இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டாலும் ஒரு சிலர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளை காயப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ,

நபர் ஒருவர் INDIA கூட்டணியை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் அவர்கள் பேசிய உரையிலிருந்து எதிர் கருத்துக்களை முன் வைத்துள்ளார். ஆனால் அடுத்த சில பதிவுகளில் தமிழக வெற்றி கழகத்தின் தொகுப்பாளர் பெண்ணின் குரலை கிண்டல் செய்யும் விதமாக நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்று இருக்கும் காட்சியை பதிவிட்டு அவரை கேலி செய்துள்ளார்.

மாநாட்டில் விஜய் அவர்கள் சாதி மதம் இனம் நிறம் மொழி பாலினம் என எந்தவித பாகுபாடும் அற்ற சமத்துவமான ஆட்சியை நிலவுவது எங்களுடைய கொள்கை என ஒருபுறம் கூற மற்றொருபுறம் அந்தப் பெண்ணின் குரலை கிண்டல் செய்து இருப்பது அவரது பாலினத்தையும் அவரது உடல் குறைபாட்டையும் சுட்டிக் காட்டுவது போல் அவரை அவமானப்படுத்துவது போல் இருப்பதாக கூறி பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.