சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் பிரம்மாண்ட வசதிகளுடன் கட்டப்பட்டள்ளது. இந்த பேருந்து முனைய திறப்பு விழாவிற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், சிவசங்கர், எம்.பி. டி.ஆர்.பாலு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மருத்துவமனை, உணவகங்கள், கடைகள், கழிவறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், குடிநீர் சுத்தீகரிப்பு நிலையம், எஸ்கலெட்டர் (மின்தூக்கி) உள்ளிட்ட நவீன வசதிகள் இந்த பேருந்து முனையத்தில் இடம்பெற்றுள்ளன. சென்னை கோயம்பேடு, ஜி.எஸ்.டி. சாலையில் நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எஸ்இடிசி மற்றும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து உடனடி நடைமுறையுடன் இயக்கப்படும்.