இந்தியாவில் பலரது வாழ்க்கை கிரெடிட் கார்டு மூலமாக தான் ஓடுகிறது. இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு முக்கிய பங்களிப்பை கொடுக்கின்றன.

இதனால், நாளுக்கு நாள் கிரெடிட் கார்டின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், 2023 ஜூலை மாதத்தில் இந்தியர்கள் கிரெடிட் கார்டு மூலமாக பயன்படுத்திய தொகை ரூ.1.45 லட்சம் கோடியாகும். இது வரை கிரெடிட் கார்டு மூலமாக படுத்தப்பட்ட மிக அதிகப்படியாக தொகை இதுவே. இதற்கு முன்னதாக இதுபோன்று எப்போதும் பயன்படுத்தியது இல்லை என கூறப்படுகிறது.