மர்ம நபர் ஒருவர் கிரிக்கெட் சூதாட்டத்திற்கு தன்னை அணுகியதாக இந்திய வீரர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார்..சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் அணி குறித்த ரகசிய தகவல்களை தன்னிடம் கேட்டதாக  சிராஜ் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது..

ஐபிஎல்லில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக விளையாடி வருகிறார் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இதனிடையே ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பிறகு ஒரு டிரைவர் சிராஜை தொடர்பு கொண்டார். பிடிஐயின் படி, இந்த ஓட்டுநர் சிராஜிடம் அணியின் உள் விஷயங்களைச் சொன்னால், இந்த வீரருக்கு ஒரு பெரிய தொகையை தருகிறேன் என்று கூறினார். ஆனால் சிராஜ் இந்த முழு விஷயத்தையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஊழல் தடுப்பு பிரிவுக்கு (ஏசியு) தெரிவித்துள்ளார்.

இதை உடனடியாக பிசிசிஐக்கு சிராஜ் தெரிவித்தார் :

இந்த தகவலுக்குப் பிறகு, பிசிசிஐயின் இந்த பிரிவு அதிரடியாக வந்து, வேகமாக விசாரணை நடத்தி, அந்த டிரைவரைக் கைது செய்தது. சிராஜை தொடர்பு கொண்டவர் புக்கி அல்ல (bookie) என்றும், ஹைதராபாத்தை சேர்ந்த டிரைவர் என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிராஜை தொடர்பு கொண்ட எந்த புக்கியும் இல்லை. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநரான இவர், போட்டிகளில் பந்தயம் கட்டுகிறார். அவர் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்தார், இதன் காரணமாக அவர் அணியைப் பற்றிய உள் தகவல்களுக்கு சிராஜைத் ​​தொடர்பு கொண்டார். இதுகுறித்து உடனடியாக சிராஜ் தகவல் தெரிவித்தார் என்றார்.

டிரைவர் கைது செய்யப்பட்டார் :

அதிகாரியின் கூற்றுப்படி, அந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சிராஜ் தகவல் கொடுத்ததையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அமலாக்க அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு சற்று முன்பு, மார்ச் மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் போது சிராஜ் அணுகப்பட்டார், உடனடியாக இந்த விஷயத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஊழல் தடுப்பு பிரிவுக்கு சிராஜ் (ஏசியு) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.